பாடலாசிரியர்கள் பல்லை நற நறக்கிறார்கள். படம் இயக்குகிறவர்கள் எல்லாம் பாடலாசிரியர்களானால் பற்றி எரியத்தானே செய்யும் வயிறு. இயக்குனர்களையும் நொந்து கொள்வதற்கில்லை. வெம்பிப்போன கவி மனதை அவர்களும் எப்படிதான் ஆற்றப்படுத்துவார்கள்.
தமிழகம் படத்தை இயக்கும் கே. சுரேஷ் குமார் நல்ல கவிதைக்காரர். படத்தில் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். சாம்பிளுக்கு மூன்று வரிகள்.
நிக்குறா நடக்குறா சிணுங்குறா
ஏன்டி இப்படி நடிக்கிற
என்ன சொல்ல நினைக்கிற...
நல்லவேளை, ஒரு பாடலுடன் சுரேஷ் குமாரின் கவிமனம் அமைதியடைந்து விட்டது. மீதி பாடல்களை தொழில்முறை பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு முத்து விஜயனின் முத்தான மூன்று வரிகள்.
என்ன வெச்சுக்கடா இல்லை கட்டிக்கடா
பல சேட்டை பண்ணி
பாடாய் படுத்துடா...
பாடலை படித்து பரவசமானவர்கள் இசையுடன் கேட்டு மகிழ ஆடியோ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். கேளுங்கள் கேளுங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள்!