Publish Date: Tue, 26 Aug 2008 (18:16 IST)
Updated Date: Tue, 26 Aug 2008 (18:15 IST)
அஜித்தின் ஏகன், விஜய்யின் வில்லு, ஜெயம் ரவியின் பேராண்மை, ஆர்யாவின் சர்வம் உள்ளிட்ட படங்களைத் தயாரிக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் மேலும் இரு படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
காதல் வைரஸ் படத்தை இயக்கிய கதிர் ஐங்கரனில் படம் இயக்க கதை சொல்லியிருக்கிறார். இதில் அனேகமாக வினய் நாயகனாக நடிக்கலாம். இசை ஏ.ஆர். ரஹ்மான்.
அதேபோல், பிப்.14 படத்தை இயக்கிய ஹோசிமின் ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸுக்காக ஒரு படம் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்கக் கூடும்.