Publish Date: Tue, 26 Aug 2008 (17:38 IST)
Updated Date: Tue, 26 Aug 2008 (17:37 IST)
ஒரு நாடே ஒருவனை தேடுகிறது. அவனோ ஒரு ஊருக்குள் இருந்து கொண்டு வாடா மகனே வாடா என்று தேடுகிறவர்களை அழைக்கிறான்.
ஒன் லைனை கேட்கும் போதே அட, சுந்தர் சி படம் என்று தெரிந்து விடுகிறது. படத்தை இயக்குகிறவர் கமர்ஷியலில் கரை கண்ட ஏ.வெங்கடேஷ். படம், வாடா.
ஸ்கிரீன் ப்ளே என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் மும்பையைச் சேர்ந்த கீதா பஸ்ரா நடிப்பதாக இருந்தது. சில நடைமுறை சிக்கல்கள். அவரை நீக்கிவிட்டு ஷெரில் பிரிண்டோவை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதில் சுந்தர் சிக்கு டூரிஸ்ட் டிராவல்ஸ் டிரைவர் வேடம். டிராவல்ஸின் ஓனர் விவேக். கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் படத்தை எடுக்க இருக்கிறார் ஏ.வெங்கடேஷ்.
தமிழ் சினிமா ஆகம விதிப்படி சிவாஜியின் என்னடி ராக்கம்மா பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார் டி.இமான்.