என்னை தெரியுமா? பட விழாவுக்கு சிம்புவும் வந்திருந்தார். படத்தின் நாயகன் மனோஜ் குமார் சிம்புவின் உற்ற நண்பராம். ஒரே வகுப்பில் படித்தவர்களாம் இவர்கள்.
நண்பனுக்காக படத்தில் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார் சிம்பு. சிம்புக்கு பாடுவதுடன் சிலேடையும் தெரியும் என்பது அவர் பேச்சில் வெளிப்பட்டது.
மனோஜ் குமார் என்னுடைய நண்பர். அதனால் விழாவுக்கு வந்திருக்கிறேன். மோகன்பாபுவின் (மனோஜ் குமாரின் தந்தை) நெருங்கிய நண்பர் ரஜினி. ஆனால் அவர் வரவில்லை என்று தன்னையும் ரஜினியையும் ஒப்பிட்டு பேசினார். அதோடு முடிந்ததா? இல்லை!
பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதையிருந்தால்தான் படம் ஓடும் என்று குசேலனை குத்தியவர், இனிவரும் காலத்தில் டைரக்சன் தெரிந்த நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓடும் என இடித்துரைக்கவும் செய்தார்.
வயதுக்கு மீறி திறமை இருந்தால் ரசிக்கலாம். பேச்சிருந்தால்...? நிஜத்தை பேசினாலும் நெருடத்தானே செய்யும்!