அதிகம் எதிர்பார்க்கப்படும் வெங்கட்பிரபுவின் சரோஜா வெளியீடு தள்ளிப் போகிறது. இம்மாத இறுதியில் வெளியாவதாக இருந்த படம், அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த வாரம் ஜெயம் கொண்டான், தாம்தூம் படங்கள் திரைக்கு வருகின்றன. அவற்றுடன் சரோஜாவும் வெளிவருவதாக இருந்தது.
சரோஜாவின் தெலுங்கு பதிப்பை தமிழில் வெளியாகும் அதேநாள் வெளியிட வேண்டும் என்பதற்காக அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்கள்.
தெலுங்கிலும் சரோஜா என்ற பெயரிலேயே படத்தை வெளியிடுகிறார்கள்.