மோசர் பேரின் அவள் பெயர் தமிழரசியில் எல்லோருக்கும் முன்பாக ஒப்பந்தமானவர் நவ்யா நாயர். ஹீரோயின் நவ்யா நாயர் என முடிவான பிறகே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோ ஜெய் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
மோசர் பேரின் படத்தில் நாயகியாக நடிப்பதால், அவர்களின் இன்னொரு படமான ராமன் தேடிய சீதையில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நவ்யா.
இப்போது தமிழரசியில் நவ்யா இல்லை. நீக்கி விட்டனர். புதுமுகத்தை தேடி வருகின்றனர். இதில் நவ்யாவுக்கு வருத்தம்.
அவள் பெயர் தமிழரசியில் வாய்ப்பு கிடைத்ததால்தான் ராமன் தேடிய சீதையில் கவுரவ வேடத்திற்கு ஒத்துக்கொண்டார் நவ்யா. இது அனைவருக்கும் தெரியும். தெரியாத இன்னொரு விஷயத்தை அம்பலப் படுத்தியிருக்கிறார் நவ்யா.
அவள் பெயர் தமிழரசியில் டைட்டில் ரோலில் நடிப்பதால் ராமன் தேடிய சீதையில் நடிக்க சம்பளமே வாங்கவில்லையாம்! இப்போது தமிழரசியும் இல்லை, சம்பளமும் இல்லை.
நவ்யா வருத்தப்படுவது நியாயம்தானே!