காத்தவராயனுக்குப் பிறகு மூன்று படங்களில் நடித்து வருகிறார் கரண். சீரான இடைவெளியில் படங்களை வெளியிட வேண்டும் என்பது இவரது விருப்பம். இதனால் தொடங்கப்பட்ட சில படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் நிலை.
மலையன், கனகவேல் காக்க, கந்தா ஆகிய மூன்று படங்களிலும் நடித்து வருகிறார் கரண். இதில் மலையன் தீபாவளி ரிலீஸ். டிசம்பருக்கு கனகவேல் காக்க, தஞ்சாவூரில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து கந்தா அடுத்த வருடமே வெளியாகிறது.
கரணின் இந்த முடிவால் கந்தா யூனிட்டுக்கு இப்போது முழு ஓய்வு. மூன்று படங்கள் முடிக்க வேண்டிய நிலையில் நந்தா பெரியசாமியின் அர்த்தனாரி படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். அரவாணியாக இதில் நடிக்கும் கரண், இதனை எப்போது தொடங்குவார் என்பது கேள்விக்குறி.
தடையில்லாமல் படம் நடிக்கும் ஹீரோக்களில் சுந்தர் சி-க்கு அடுத்த இடம் இப்போது கரணுக்குதான்!