பாடலாசிரியர் இளைய கம்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இயக்குனர் சஞ்சய்ராமை கவிஞராக்கியிருக்கிறது. இவர் இயக்கும் அனைத்துப் படங்களிலும் பாடல்களும் இவரே.
சமீபத்தில் பூவா தலையா படத்திற்கு சரித்திர பின்னணியில் ஒரு பாடல் எழுதினார் சஞ்சய்ராம்.
சோழ மன்னர் பூமியிலே சத்ரியன் அவதரிச்சான்
கரிகால மன்னனுக்கும் மனுநீதி சோழனுக்கும்
சேதி சொல்லு சேதி சொல்லு வாளெடுத்து வந்திருக்கேன்...
இந்தப் பாடலை தஞ்சாவூர் பின்னணியில் எடுத்தார் சஞ்சய்ராம். கிருஷ்ணகுமாரும், உதயாவும் பாடல் காட்சியில் நடித்தனர்.
ஷெரின், மேகா நாயர், ஸ்வேதா நடிக்கும் பூவா தலையாவில் பிரபல வர்மக்கலை நிபுணர் கண்ணனை நடிக்க வைத்துள்ளார் சஞ்சய்ராம். படத்தில் இவரும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
படத்தை சஞ்சய்ராமின் லிங்கம் தியேட்டர்ஸ் தயாரிக்கிறது.