திருவிழா உற்சாகத்தில் இருக்கிறது ஜே.கே. ரித்தீஷின் அலுவலகம். சும்மாவா... குசேலன், சத்யம் எல்லாம் அடிவாங்க, அட பரவாயில்லையே என பாராட்டு வாங்கியிருக்கிறது நாயகன்.
செல்லுலாரின் காப்பிதான். அதனை திகட்டாமல் திரைக்கதையாக்கியிருப்பது இயக்குனர் சரவண ஷக்தியின் திறமை. இருபது நிமிடம் தொய்வு... அப்புறம் ராக்கெட் வேகம். இது ரசிகர்களின் கமெண்ட்.
சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஜே.கே. ரித்தீஷின் பில்டப் திணிப்புகளை கத்தரித்தால் படம் இன்னும் நாலு நாள் அதிகம் ஓடும் என்பது விமர்சகர்களின் கணிப்பு.
ஓபனிங் நன்றாக இருப்பதால் அதை அப்படியே மெயிண்டெய்ன் செய்து படத்தை 100 நாள் ஓட்டுவதே இப்போது நாயகன் டீமின் ஒரே இலக்கு. பத்திரிக்கை, தொலைக்காட்சிக்கு விளம்பரம் என்ற பெயரில் பண மடையை திறந்து விட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு இன்னொரு முதலமைச்சருக்கான ஸ்கோப் பிரகாசமடைந்துள்ளது.