அரசியலில் ஆள் பலம், சினிமாவில் புஜபலம்... இரட்டை குதிரையில் அலுங்காமல் செல்கிறது சரத்குமாரின் பயணம். அரசியலில் பிஸியான பிறகே இவரின் திரை வாழ்க்கை சூடுபிடித்திருக்கிறது எனலாம்.
1977, ஜக்குபாய் படங்களைத் தொடர்ந்து ஏ. வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் மகாபிரபு, ஏய் படங்களில் நடித்துள்ளார் சரத்.
இந்தப் படத்துக்கு இமயமலை என்ற பெயரை தேர்வு செய்துள்ளாராம். வலிமையானது, உயரமானது என்பதை தாண்டி, அடிக்கடி ரஜினி வழியில் இமயமலை சென்று வருகிறார் சரத்குமார். அதனால்தான் இந்தப் பெயர் என்கிறார்கள்.
உண்மையா என்பதை சமத்துவ தலைவர்தான் சொல்ல வேண்டும்.