நேற்று மூன்று படங்களின் இசை வெளியீட்டு விழா. மெய்ப்பொருள், குடியரசு மற்றும் பந்தயம்.
மெய்ப்பொருள் ஆடியோவை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன் வெளியிட நடிகை சோனா பெற்றுக்கொண்டார்.
விக்னேஷ்வரன் நடித்திருக்கும் குடியரசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் சீஃப் கெஸ்ட் பாக்யராஜ். வழக்கம் போல சொந்த அனுபவங்களைக் கூறி விழாவை சுவாரஸ்யப்படுத்தினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜாவை பார்க்க முடிந்தது. அவர்தான் குடியரசுக்கு இசை.
பந்தயம் படத்தின் முதல் ஆடியோவை ஜெயம் ரவி வெளியிட பரத் பெற்றுக் கொண்டார். முன்னதாக விஜய் மனைவி சங்கீதாவும், சந்தியாவும் குத்துவிளக்கேற்றினார்கள்.
படத்தின் மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. அதில் ஒன்று சுராங்கனி பாடலின் ரீ-மிக்ஸ். மேக்னா நாயுடுவின் கவர்ச்சியில் பார்வையாளர்களை சுண்டி இழுத்து சுராங்கனி. காதுடன் கண்ணுக்கும் விருந்தளித்த இசை விழா!