Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயின் புதிய படம் வேட்டைக்காரன்!

விஜயின் புதிய படம் வேட்டைக்காரன்!
, சனி, 23 ஆகஸ்ட் 2008 (19:57 IST)
மன்ற கொடி அறிமுகப்படுத்திய பிறகு ரஜினியின் பாதையிலிருந்து விலகி எம்.ஜி.ஆரின் ராஜபாட்டையில் பயணிக்கிறார் விஜய். எப்படி?

இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் ஒரு காட்சி. விஜய் படத்தை பேரரசு இயக்க, அந்த படப்பிடிப்பை விஜய் ரசிகரான நிதின் சத்யா வேடிக்கை பார்க்கிறார். விஜய் நடிக்கும் படத்துக்கு ஒரு பெயர் வேண்டுமே. அதற்கு தந்தையும் மகனும் சேர்ந்து தேர்வு செய்த பெயர் எம்.ஜி.ஆர்.!

வில்லுக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தின் பெயர் என்ன என்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆரின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான வேட்டைக்காரன்! ஏவி.எம். (பாலசுப்ரமணியன்) தயாரிக்கும் இப்படத்தை தரணியின் அசிஸ்டெண்ட் பாபு சிவன் இயக்குகிறார்.

வேட்டைக்காரன் பழைய படத்தின் பெயர் என்பதால், மீண்டும் அதனை பயன்படுத்த முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். அனுமதி கிடைத்தால், வேட்டைக்காரன். இல்லையென்றால் மற்றொரு எம்.ஜி.ஆர். படப்பெயர், சந்தேகமென்ன!

Share this Story:

Follow Webdunia tamil