Publish Date: Fri, 22 Aug 2008 (20:00 IST)
Updated Date: Fri, 22 Aug 2008 (20:00 IST)
எங்கள் ஆசான் படத்திற்குப் பிறகு அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிக்கிறார் விஜயகாந்த். விக்ரமன் இயக்கும் இப்படத்தில் பிரதான வேடத்தில் நடிப்பவர் மீரா ஜாஸ்மின்.
வானத்தைப் போல படத்தில் வருவது போல் விஜயகாந்துக்கு இதில் மரியாதைக்குரிய வேடமாம். அதனால் படத்தின் தலைப்பிற்காக மண்டையை உடைக்காமல், மரியாதை என்றே வைத்துள்ளார் விக்ரமன்.
சென்னை காதலுக்குப் பிறகு விக்ரமன் இயக்கும் படம்... கதை கேட்டு நெகிழ்ந்து மீரா ஜாஸ்மின் கால்ஷீட் கொடுத்திருக்கும் படம்.
வானத்தைப் போல வெற்றிக்குப் பின் விக்ரமன், விஜயகாந்த் இணையும் படம். இப்படி பல முக்கியத்துவம் இப்படத்திற்கு உள்ளதால், மரியாதைக்கு திரையுலகில் மரியாதை அதிகரித்துள்ளது.
வானத்தைப் போல கூட்டணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்!