Publish Date: Fri, 22 Aug 2008 (19:01 IST)
Updated Date: Fri, 22 Aug 2008 (19:00 IST)
கேட்பதைக் கேள்வியின்றி செய்து தரும் தயாரிப்பாளர். இசைக்கு இசைஞானி இளையராஜா. கேமராவிற்குக் காசி விஸ்வநாதன். புதுமுக இயக்குநருக்கு இதெல்லாம் பேரதிர்ஷ்டம். திருப்தியின் பிரகாசம் பளபளக்கச் சொல்கிறார் கேந்திரன் முனியசாமி. அய்யன் படத்தின் இயக்குநர்.
பரட்டைத் தலையும் முரட்டு தாடியுமாக பாதி இளைத்த பருத்தி வீரன் போலிருக்கும் வாசன் கார்த்திக் அய்யனின் ஹீரோ. அய்யன் என்பது படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர். இவருக்கு ஜோடி திவ்யா பத்மினி என்ற சேரநாட்டுப் புதுமுகம்.
பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்பதற்கு என்னுடைய அரிய செல்வி ஓர் உதாரணம் என்று சிலாகிக்கிறார் முனியசாமி. இந்த அரிய செல்வி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திவ்யா பத்மினி.
அய்யனின் இன்னொரு சுவாரஸ்யம், சிங்க முத்துவும் இதில் நடிக்கிறார். இதிலென்ன ஆச்சர்யம் என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு... காமெடியன் சிங்க முத்துவின் மகன்தான் அய்யனின் நாயகன் வாசன் கார்த்திக்.