ரசிகர்களைக் கவரக் கவர்ச்சித் தூண்டிலுடன் காத்திருக்கிறது அர்ஜூன் நடிக்கும் துரை. தூண்டில் என்றால் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று.
துரையில் அரசியல் கட்சித் தொண்டனாக வருகிறார் அர்ஜூன். பத்திரிகை நிருபராக வரும் கீரத் இவருக்கு ஜோடி. கிளாமருக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்.
கீரத்திற்குப் போட்டியாக கஜாலாவும் கலக்கல் ரோல் ஒன்றில் நடிக்கிறார். இது போதாதென்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார் அமா என்ற கவர்ச்சி சுமோ. ஒரு பாடல் காட்சியில் அர்ஜூனுடன் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் சுமா.
ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் துரை விரைவில் திரைக்கு வருகிறது.