முதல்வர் மகாத்மா! காமராஜ் படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸின் புதிய படம் இது. இந்தக் காலகட்டத்தில் காந்தி உயிரோடு இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இந்த ஒரு வரிக் கேள்வியே முதல்வர் மகாத்மாவின் கதை.
இந்தப் படத்தின் பாடல்களை அகிம்சை என்ற பெயரில் இசை ஆல்பமாக வெளியிடுகிறார்கள். அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி அன்று இந்த இசை ஆல்பம் வெளிவருகிறது. அன்று சர்வதேச அகிம்சை தினமும் கூட.
காந்தியின் கொள்கைகளை மையமாகக் கொண்டு பாடல்கள் தயாராகின்றன. முத்துலிங்கம், புலமைப் பித்தன், மு.மேத்தா, நா.முத்துகுமார், சிந்து பாஸ்கர் அகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.
பாரதியார் பாடல் ஒன்றும் ஆல்பத்தில் இடம்பெறுகிறது. காந்திக்குப் பிடித்த ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடல் இல்லாமல் அகிம்சை ஆல்பமா? அதுவும் உண்டு.
ஆல்பத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் கங்கை அமரன். சிறந்த முயற்சி, சிறந்த உள்ளத்தோடு வரவேற்போம்!