போஸ்டர், பேனர், ஆட்டோ பின்புறம் என எங்கெங்கு நோக்கினும் முஷ்டி மடக்கி வீரம் காட்டுகிறார் ஜே.கே. ரித்தீஷ். இன்று (22-08-08) ரித்தீஷ் நடித்த நாயகன் ரிலீஸ். அதற்குதான் இந்த பில்டப் போஸ்டர் எல்லாம்.
ஹாலிவுட்டில் வெளியான 'செல்லுலார்' படத்தின் கோலிவுட் காப்பிதான் நாயகன். படம் தொடங்கும் போது ரமணா ஹீரோ. படம் முடியும் போது ரித்தீஷ். எல்லாம் பணம் செய்யும் மாயம்.
இது ஒருபுறம் இருக்க நாயகனை தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். அங்கு படத்தின் பெயர் அங்குசம்.
அஸ்வின் சேகரின் 'வேகம்' படத்தில் பிரபு நடித்தாரே போலீஸ் வேடம். அதே கதாபாத்திரம்தான் நாயகனில் ரித்தீஷுக்கு! குழப்பம் வேண்டாம். வேகமும் செல்லுலாரின் காப்பிதான்!