கஜினியில் தொடங்கிய சூர்யா - அமீர்கான் நட்பு, பெவிகால் போட்ட மாதிரி பலப்பட்டிருக்கிறது. காரணம், அமீர்கான் சூர்யாவுக்கு அளித்த பரிசு.
அமீர்கான் முதன் முதலில் இயக்கி நடித்த தாரே ஜமின் பர் தமிழில் வால் நட்சத்திரம் என்ற பெயரில் வெளியாகிறது. உருப்படியான விஷயங்களுக்கு உதவ முன்வந்து நிற்பவர் சூர்யா. அவரிடம் அமீர்கானுக்கு டப்பிங் பேச சொல்லி கேட்டிருக்கிறார்கள்.
டிஸ்லெக்சியா குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய படம் என்பதால் காசு வாங்காமல் அமீர்கான் கேரக்டருக்கு டப்பிங் பேசி கொடுத்தார் சூர்யா. இந்த விஷயம் அமீர்கான் காதுக்கு சென்றுள்ளது.
சூர்யாவின் பெருந்தன்மையை பாராட்டும் விதத்தில் லேப்டாப் ஒன்றை சூர்யாவுக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலில் குளிர்ந்து போயிருக்கிறார்கள் இரு ஸ்டார்களும்.