Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேரன் சேர்க்கும் பொக்கிஷம்!

Advertiesment
சேரன் சேர்க்கும் பொக்கிஷம்!
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (20:25 IST)
அபராதம் விதித்தே ஆயிரக் கணக்கில் பணம் சேர்த்திருக்கிறாராம் சேரன். நல்ல விஷயத்திற்கு இந்த பணத்தை செலவிட அவர் தீர்மானித்துள்ளாராம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளில் ஒன்று, படப்பிடிப்பு தளத்தில் யாரும் செலஃபோன் உபயோகிக்கக் கூடாது!

கலையுலகம் காற்றில் பறக்கவிட்ட இந்த கட்டுப்பாட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஒரேயொருவர் சேரன். படப்பிடிப்பு தளத்தில் செலஃபோனை கையால் தொடுவதில்லை இவர். மற்றவர்கள் தொடுவதற்கும் அனுமதியில்லை.

பொக்கிஷம் படப்பிடிப்பு செலஃபோன் சிணுங்கல் இல்லாமல் நடந்து வருகிறது. மீறி யாரேனும் செல·போனில் பேசினால் ஸ்பாட் பைன் 250 ரூபாய்.

இப்படி அபராதம் வசூலித்த பணமே ஆயிரக்கணக்கில் தேறுமாம். படம் வெளியாகும் போது இதனை நல்ல காரியங்களுக்கு செலவிட உள்ளாராம் சேரன்.

நிஜமான பொக்கிஷம்!

Share this Story:

Follow Webdunia tamil