Publish Date: Thu, 21 Aug 2008 (20:05 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (20:05 IST)
தனது முதல் நான்கு நாள் வசூலில் குசேலனை பின்னுக்குத் தள்ளியுள்ளது விஷாலின் சத்யம்.
படங்களின் வசூலை அறிய சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் ஒரு சோறு பதம். இங்கு அமோகமாக போகும் அனைத்துப் படங்களின் அறுவடையும் தமிழகமெங்கும் அபாரமாகவே இருக்கும்.
வெளியான முதல் இரண்டு வாரங்கள் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இருந்த குசேலனை, சென்ற வாரம் வெளியான சத்யம், இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது.
சத்யத்தின் முதல் நான்கு நாள் வசூல், சுமாரமாக நாற்பது லட்சம். கடந்த வார குசேலன் வசூல் ஏறக்குறைய நாற்பத்தி நான்கு லட்சம். மூன்று வார இறுதியில் குசேலனின் மொத்த வசூல் சென்னையில் மட்டும் 3.08 கோடி!
சென்னை பாக்ஸ் ஆ·பிஸில் மூன்றாம் இடம் தசாவதாரத்திற்கு. இதன் சென்ற வார வசூல் 6.64 லட்சம். பத்து வார இறுதியில் சென்னையில் மட்டும் மொத்த வசூல். 10.5 கோடி!