Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரோஜாவுக்கு U சான்றிதழ்!

Advertiesment
சரோஜாவுக்கு U சான்றிதழ்!
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (20:02 IST)
வெங்கட்பிரபுவின் சரோஜாவுக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த U சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளை வஞ்சனையே இல்லாமல் வெட்டி எறிகிறது தணிக்கைக் குழு. இதன் ஷார்ப் கத்தரிக்கோலுக்கு சமீபத்தில் பலியான படம் சத்யம். பாடல் காட்சியொன்றில் சில இடங்களை எடிட் செய்தவர்கள் படத்துக்கு U/A சான்றிழே வழங்கினர்.

சரோஜா வித்தியாசமான திரைக்கதையில் உருவான படம். ஆக்சன் காட்சிகளும் அதிகம். கண்டிப்பாக U/A தான் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக U சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

சரோஜாவுக்கு ஒரு நாள் முன்னதாக இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் தாம்தூம் படத்திற்கும் U சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil