Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவள் பெயர் தமிழரசி தொடக்க விழா!

Advertiesment
அவள் பெயர் தமிழரசி தொடக்க விழா!
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (20:01 IST)
இடம், சென்னையின் கிரீன் பார்க் ஹோட்டல், பாலுமகேந்திரா தொடங்கி சசிகுமார் வரை ஏராளமான திரை பிரபலங்கள்.

மோசர் பேர் நிறுவனம் ப்ளூ ஓசன் எண்டர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிக்கும் அவள் பெயர் தமிழரசியின் தொடக்க விழாவே வெற்றி விழாவாக களை கட்டியது.

பாலுமகேந்திராவின் முன்னாள் உதவியாளர் மீரா கதிரவன் அவள் பெயர் தமிழரசியை இயக்குகிறார். நல்ல படிப்பாளி, சிறந்த மனிதன் என சிஷ்யனை பாராட்டியவர், தனது உதவியாளர்கள் வெற்றிமாறன், ராம், சசிகுமார் ஆகியோரைத் தொடர்ந்து மீரா கதிரவனும் படம் இயக்குகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார், மீராவை ஜீராவாக உருகவைக்கும் குரலில்.

படத்தின் நாயகன் ஜெய் என்பதால் வெங்கட்பிரபுவிடமிருந்து அவருக்கு ஸ்பெஷல் பாராடடு கிடைத்தது. வெங்கட்பிரபுவின் முதல் ஹீரோ அல்லவா!

விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். தொடக்க விழா நடந்தாலும் படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. குத்துவிளக்கு இன்றியும் ஜெகஜோதியாக ஜொலித்தது துவக்க விழா!

Share this Story:

Follow Webdunia tamil