ஆரம்பித்த ஜோரில் இசை வெளியீட்டு விழாவையும் அமர்க்களப் படுத்திவிட்டது தமிழகம் யூனிட்.
ரிஷி (ரிச்சர்ட்) நாயகனாக நடிக்கும் தமிழகம் படத்தில் வேகம் அர்ச்சனா ஹீரோயின். இயக்கம் கே. சுரேஷ்குமார். ஏ.ஜி. அருளூ, சந்திரசேகர் என இருவர் தயாரிப்பு.
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பாக்யராஜ் ஆடியோவை வெளியிட தயாரிப்பாளர் தாணு பெற்றுக் கொண்டார். விழாவின் ஹைலைட், பாக்யராஜின் பேச்சு.
அவமானங்கள், புறக்கணிப்புகளை கடந்து தான் வெற்றி பெற்ற கதையைச் சொன்னவர், நான் 25 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியொரு நிலையில் இயக்குனர் சுரேஷ¤ம் இருக்கிறார். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதி என கட்டியம் கூறினார்.
தமிழ் திரையுலகுக்கு இன்னொரு திரைக்கதை மன்னன் கிடைத்தால் எல்லா வகையிலும் நண்மையே!