Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய விருதுக்கு அடிபோடும் நடிகை!

Advertiesment
தேசிய விருதுக்கு அடிபோடும் நடிகை!
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (17:34 IST)
கேரளா வரவுகளான அஸின், கோபிகா, மீரா ஜாஸ்மின், சந்தியாவைத் தொடர்ந்து இன்னொரு நாயகி தமிழில் இறக்குமதியாகியிருக்கிறார் சாரிகா.

விஜய் ஹீரோவாக நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜித் இயக்கிய படம் கி.மு. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம். சாரி ரித்திஸ் என்ற தனது சொந்தப் பெயரை சாரிகா என்று மாற்றி வைத்துக் கொண்டார். அப்பா ரித்தீஸ் - அம்மா சச்சிதா. சொந்த ஊர் கேரளாவில் உள்ள அழகான கண்ணூர்.

பி.சி.ஏ. வரை படித்துள்ள இவர் காலேஜில் படு சுட்டியாம். அதேபோன்ற கேரக்டர்தான் கி.மு.விலும் கிடைத்தது அதனால் தூள் பண்ணியிருக்கிறேன் என்று பெருமையாக சொல்லும் இவர், 2005 ஆம் வருடம் மிஸ் கேராள பட்டம் பெற்றவர்.

அத்தோடு பரதமும் நன்றாக ஆடத் தெரிந்தவர். ஷோபனா, மஞ்சுவாரியாரின் ரகிசை இவர். கி.மு.வில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு இரண்டு படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டுமென்பதுதான் உங்கள் ஆசையா என்றால், அதெல்லாம் இல்லை நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். அத்தோடு தேசிய விருதும் வாங்க வேண்டும் என்றும் கூறுகிறார். பின்னே ஆசையில்லாத பிரியாமணிக்கே கிடைக்கும்போது, ஆசைப்படும் உங்களுக்கு கிடைக்காதா என்ன?

Share this Story:

Follow Webdunia tamil