சித்தி விநாயகர் பிலிம்ஸ் மல்டி மீடியா என்ற புது பட நிறுவனம் தற்போது கார்த்தீகை என்ற படத்தை தயாரித்து வருகிறது.
சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு இப்போது பெரிய பட்ஜெட் படமாக மாறிவிட்டது என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு. இப்படத்தில் சமிக்சா, மாளவிகா, சுமன், மகாதேவன், காதல் தண்டபாணி, சத்யம் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ஹீரோவாக விக்ரமாதித்யா நடிக்க, இவருடன் ஜோடி சேருகிறார் அமோகா. இவர் ஏற்கனவே சரண் இயக்கிய ஜே.ஜே. படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர்.
அப்படம் சரியாகப் போகாததால் தமிழ்ப் பட உலகை வெறுத்துவிட்டு இந்திக்கு சென்ற அமோகாவெனும் தன் பெயரை நிஷா கோத்தாரி என மாற்றிக்கொண்டு ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு, அதுவும் சரிப்பட்டு வராததால், மீண்டும் அமோகாவாகவே தமிழுக்கு வந்து இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முப்பத்தைந்து லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் ஒரு சூப்பரான குத்துபூ பாட்டுக்கு ஆடினார்.
அப்பாடலுக்கான அமோகாவின் அரைகுறையான ஆடையைப் பார்த்து அரங்கமே ஆடிப் போனதாம். அப்படியென்றால்... எப்படி இருக்குமென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.