ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. அறிந்தும் அறியாமலும், பில்லா, போக்கிரி, ஓரம்போ, தூம் என வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
இவருடைய அப்பா தெலுங்கில் மிகப்பெரிய விநியோகதஸ்தர். தன் மகனுக்காக சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கிட்டத்தட்ட 12 ஏக்கர் பரப்பில் நூறு கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமான ஸ்டுடியோ கட்டிக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
27 ஆயிரம் சதுர அடியில் ஒரு அரங்கமும், 13 ஆயிரம் சதுர அடியில் மற்றொரு அரங்கமும் அமைக்கப்பட இருக்கிறது. அத்தோடு 14 சிறிய ஏ.சி. அரங்கங்களம் கட்ட இருக்கிறார். அத்தோடு அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலிப்பதிவு கூடங்கள், 70 மேக்கப் அறைகள், நடிக-நடிகைகளுக்கான உடற்பயிற்சி கூடங்கள்.
ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடும் வசதியுள்ள கூடம். அத்தோடு 250 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வசதி கொண்ட சினிமா தியேட்டரும் கட்ட இருக்கிறார்.
மொத்தத்தில் எல்லா வசதிகளும் கொண்ட சிறப்பான பிரமாண்ட அரங்கங்கள் கொண்ட நவீன ஸ்டுடியோ சென்னையில் அமைய இருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் நவீன வசதிகள் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தாமல் இருந்தால் சரி.