Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனம் மாறிய வித்யாசாகர்!

Advertiesment
மனம் மாறிய வித்யாசாகர்!
, திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (19:51 IST)
எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் இசையைப் பொருத்தவரையில் அந்தந்த இசைக் கருவிகளை பயன்படுத்தினால்தான் பாடலுக்கு உயிர் இருக்கும் என்பதால் வாத்தியக் கலைஞர்களை அழைத்தே இசையமைத்து வருபவர் இசைஞானி இளையராஜா.

இன்றைய பல இசையமைப்பாளர்கள் வெளிநாட்டிலிருந்து நவீனமான கீபோர்டு மற்றும் இசை சம்பந்தமான கம்ப்யூட்டர் டஸ்குகளை வாங்கி, தபேலா முதல் வயலின், புல்லாங்குழல், தவில் என பல்வேறு இசைக் கருவிகளின் ஒலிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

அப்படித்தான் கீ போர்டை இதுநாள் வரையில் நம்பிக்கொண்டு இருந்த வித்யாசகர் 'ராமன் தேடிய சீதை' படத்திற்கு இசைக் கலைஞர்களை அமைத்தே ட்ராக் எடுத்திருக்கிறார். பாடல்களும் பிரமாதமாக இருக்க, இனி தொடர்ந்து அப்படியே லைவ்வாக இசையை சேர்க்க எண்ணியிருக்கிறார்.

இதை எல்லா இசையமைப்பாளர்களும் பின்பற்றினால்... பல பின்னணி இசைக் கலைஞர்களுக்கு வேலை கிடைப்பதோடு உயிரோட்டமான பாடல்களும் நமக்குக் கிடைக்கும். என்னதான் பேனில் காற்று வாங்கினாலும், இயற்கை காற்றுக்கு ஈடாகுமா? அதுபோலத்தான் இசையும்.

Share this Story:

Follow Webdunia tamil