முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கில் வெளியாகி, பின் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜகன்மோகினி. ஜெயமாலினியும், நரசிம்மராஜும் இணைந்து நடித்த படம். குடும்பம் குடும்பமாக பிள்ளைக் குட்டிகளோடு சென்று பார்த்த படம். விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார். தற்போது அதே பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான ஸ்டில்களும், செய்திகளும் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே போகிறது. அத்தோடு பழைய ஜகன்மோகினியில் ஜெயமாலினி கேரக்டரில் நம்ம நமீதா நடிக்கிறார் என்றால் சும்மாவா. அத்தோடு நாயகனாக நடிக்கும் ராஜாவுக்கு ஜோடியாக நிலா நடிக்கிறார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்தப் படத்தில் ஜெயமாலினி கவர்ச்சியில் தூள் கிளப்பியிருப்பார். அப்படியிருக்க இந்த புதிய ஜகன்மோகினியில் மிகவும் வித்தியாசமான நமீதாவை கண்டு ரசிக்கலாம்.
மேலும், நமீதாவின் அம்மாவாக நடிக்க ஜெயமாலினியை கேட்க, அவர் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு பதிலாக முன்னாள் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி நடிக்கிறார்.
பழைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும் கதையில் நிறைய வித்தியாசம் செய்திருக்கிறோம். அதனால், அதைவிட இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்கிறார் இப்பட இயக்குனர் என்.கே. விஸ்வநாதன்.