Publish Date: Sat, 16 Aug 2008 (18:57 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய படங்களை இயக்கிய தங்கர்பச்சான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நாயகனாகவும் நடித்தார்.
இதற்கிடையில் ஒரு கதையை தயார் செய்து பல முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்ல, யாரும் நடிக்க முன்வராததால் தன் அடுத்த படத்திலும் தானே நாயகனாகவும் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
அவருடைய உருவம் தற்போதை கதைக்கு ஒத்துவராத காரணத்தால் உடம்பை குறைக்க திட்டமிட்டு தினம் இரண்டு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
முன்பெல்லாம் கதை சொல்லி எந்த ஹீரோ நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், பகிரங்கமாகவே திட்டி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பார். ஆனால், தற்போது அப்படி எதுவும் பேட்டி கொடுக்காமல் தன் நடிப்பையும், தன் உடல் அழகையும் பார்த்து மற்ற ஹீரோக்கள் வியந்து பார்க்கும்படி செய்வேன் என்று சபதமே போட்டிருக்கிறார்.
எப்படியோ புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகாமல் இருந்தால் சரி. என்ன, ஒரு நல்ல திறமையான ஒரு ஒளிப்பதிவாளர் இப்படி துறை மாறுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.