காஞ்சிபுரத்தில் பிரபலமான தொழில் அதிபர் ஈகை கே.கருணாகரன். தன் மகன் சுபாஷை பெரிய ஹீரோவாக பிரகாசிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் யுனிவர்சல் மூவி மேக்கர்ஸ் என்ற படக் கம்பெனியை ஆரம்பித்தார். 'திருனா' என்று பெயரிடப்பட்ட அப் படப்பூஜை இன்று காலை ஏவி.எம் புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இப்பட பூஜையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் மற்றும் இயக்குனர்கள் அமீர், சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார், சுந்தர்.சி போன்றவர்களும் திரைப்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு அறிமுக நாயகன் சுபாஷை வாழ்த்தினர். இப்படத்தில் போஸ் வெங்கட் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். மேலும் பல பிரபலமான நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். நாயகியாக 'வேள்வி' என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்த ஹாசினி நடிக்கிறார்.
கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராகி அறிமுகமாகிறார் எம்.எஸ்.ரவி. ஒளிப்பதிவு அதிசயராஜ். இசை எஸ்.எம்.சரவணன். ஆர்ட் டைரக்டர் மணிவர்மா. மற்றும் அரவிந்த், தீனா ஆகியோர் நடனத்தை கவனிக்கிறார்கள். பாடல்கள் கவன்பா, புன்ஸியா, இசைப்பிரியன், தயாரிப்பு மேற்பார்வை மனோகரன். மக்கள் தொடர்பை மெளனம் ரவி ஏற்றுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த உள்ளனர்.