'கேடி' என்ற தமிழ் படத்தில் முதலில் அறிமுகமானார் இலியானா. பெரிய பட்ஜெட் படம் என்றாலும் சரியாகப் போகவில்லை. அதனால் இலியானாவுக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. அவரை நாயகியாக்க எந்த தமிழ் தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
இந்நிலையில் தெலுங்கு படவுலகுக்கு சென்ற இலியானா அங்கே தொட்டது எல்லாம் துலங்கின. பல தெலுங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். எல்லாமே ஹிட். பிரபாஷூடன் நடித்த 'முன்னா' சரியாகப் போகா விட்டாலும் அவரின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போனது.
இதனால் தன் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் இனி நடிக்கவே கூடாது என்றும் முடிவு செய்தார்.
அதன்படி தமிழிலில் நடிக்க பல பெரிய இயக்குனர்கள் கேட்டும் வரமறுத்துவிட்டார். ஆனாலும், என் படத்தில் நடிக்கிறார், இந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார், கால்ஷீட் கொடுத்து விட்டார் என்றெல்லாம் புரளி கிளம்பிக் கொண்டு இருந்தனர். கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அடிபடுகிறது. சூர்யாவுக்காவது ஜோடியாவாரா இலியானா? பொறுத்திருந்து பார்ப்போம்.