Publish Date: Sat, 16 Aug 2008 (18:25 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
தனுஷ் நடித்து, வெற்றிமாறன் இயக்க, பைவ் ஸ்டார் ஆடியோ கதிரேசன் தயாரித்த படம் 'பொல்லாதவன்'. படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் வெற்றிக்குப் பின்னால் அடுத்து வெற்றிமாறன் இயக்க, தனுஷ் நடிப்பதாக முடிவாகி இருந்தது. அதற்கான வேலைகளும் ஆரம்பமாயின. முன்பு பொல்லாதவனில் இருந்த அதே டெக்னிஷியன்களை அப்படியே இந்த படத்திலும் இருக்கும்படி வெற்றிமாறன் கேட்டுக் கொண்டதற்காக அதன்படியே ஒப்பந்தம் ஆனார்கள்.
நாயகி மட்டும் மாற்றலாம் என முடிவு செய்து தனுஷ் முடிவு செய்தபடி ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருபத்தைந்து லட்ச ரூபாய் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது.
ஆனால் தடை தனுஷ் மூலமாக வந்தது. அவரை வைத்து படம் ஆரம்பித்த தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி 'எங்கள் படங்களில் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு கதிரேசன் படத்தில் நடி' என்ற கோஷம் எழுப்ப, பிரச்சனை தயாரிப்பு சங்கம் வரை போனது.
போனால் என்ன சூப்பர் ஸ்டாரின் மருமகனாயிற்றே பேசவேண்டிய இடத்தில் பேசி சுமூகமாக தீர்த்துவிட்டார். ஆனாலும், இந்த பிரச்சனையால் கொடுத்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டு கதிரேசன் படத்துக்கு கொடுத்த தேதியை இந்திப் படத்துக்கு கொடுத்துவிட்டார் ஸ்ரேயா.