Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலக்கும் கலாபவன் மணி!

Advertiesment
கலக்கும் கலாபவன் மணி!
, சனி, 16 ஆகஸ்ட் 2008 (18:19 IST)
தன் 'மோதி விளையாடு' படத்துக்காக மலேசியா, கோலாலம்பூர் ஆகிய நாடுகளில் ஒரு மாதம் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சரண்.

இதுவும் ஒரு வித்தியாசமான காதல் படம். கூடவே ஆக்சன் படமாகவும் இருக்கும் என்கிறார் சரண். வாழ்க்கையில் எதையும் கண்டு கலங்காமல் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதனோடு மோது இறுதியில் ஜெயி என்பதை சொல்வதுதான் இப்படத்தின் கதை.

அதைப்போல காதல் வயப்பட்ட நாயகன் வினய் காதலுக்காக எதிரிகளிடம் மோதுகிறார் இறுதியில் அந்த மோதலில் அவர் எப்படி ஜெயித்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ். வினய்க்கு ஜோடி காஜல் அகர்வால்.

மலேசியா, சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்தினாலும் சென்னையில் இருப்பதைப் போலத்தான் இருந்தது. சென்னையை எவ்வளவு சுதந்திரமாக படம்பிடிக்க முடியுமோ அதைப்போல மலேசியா, சிங்கப்பூரை பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் சரண்.

மேலும், வித்தியாசமான நடிப்பு என்றால் கலாபவன் மணிதான் தன் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான மேனரிசத்தால் கலக்குவார். அதைபோல என் இரண்டு படமான 'ஜெமினி', 'ஜேஜே' படங்களில் அசத்தியதுபோல இந்தப் படத்திலும் தூள் பண்ணியிருக்கிறார். அவரின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று அடித்துச் சொல்கிறார்.

கிட்டத்தட்ட அறுபது சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் சரண்.

Share this Story:

Follow Webdunia tamil