சுப்ரமணியபுரத்தின் புதராக மண்டிய தாடியை ட்ரிம் செய்து புதுப்பொலிவுடன் இருக்கிறார் ஜெய். படம், அதே நேரம் அதே இடம்.
லட்சுமி பிக்சர்ஸ் சார்பில் ஹரிராம கிருஷ்ணன் தயாரிக்க பிரபு என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். ஜெய்க்கு ஜோடி விஜயலட்சுமி.
வேலையில்லாத பட்டதாரி ஜெய்க்கும், கல்லூரி பட்டாம்பூச்சி விஜயலட்சுமிக்கும் நடுவில் நிகழும் காதல் கெமிஸ்ட்ரியே கதை. பழகிய கதையை அழகிய ட்ரீட்மெண்டில் அட போடும்படி எடுக்கயிருக்கிறாராம் பிரபு.
கவிஞரும் தொலைக்காட்சி தொடர்களும் வசனம் எழுதி வருபவருமான லலிதானந்த் படத்துக்கு வசனம் எழுதுகிறார். ராம்ஜி அமரன் இசை. பாடல்கள் நா. முத்துக்குமார்.
படத்தில் ராகுல் என்ற இந்தி நடிகர் வில்லனாக நடிக்கிறார்.