Publish Date: Thu, 14 Aug 2008 (20:31 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (20:31 IST)
ஆக்சன் கதையுடன் வந்தால் நரேனிடம் கிடைக்கும் வரவேற்பே தனி. பூக்கடை ரவி படத்திற்குப் பிறகு இவர் கால்ஷீட் கொடுத்திருக்கும் படம் பந்தயக் கோழி.
பெயரிலேயே ஆக்சன் தாறுமாறாக தெரியும் இது, அம்மா மகன் சென்டிமெண்ட் கதையாம். அஞ்சாதே நரேன் அம்மா சென்டிமெண்ட் கதையிலா? ஆச்சரியமாக கேட்டால், அம்மாவின் சபதத்திற்காக எதிரிகளை நரேன் அழிக்கிற எபிஸோடும் இருக்கில்ல என்கிறார்கள் கிளைமாக்ஸ் சஸ்பென்சுடன்.
ப்யூச்சர் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் பந்தயக் கோழியை M.A. வேணு இயக்குகிறார். நான் கடவுள் வெளிவரும் வரை புதிய படத்திற்கு கால்ஷீட் தரமாட்டேன் என்று அறிவித்த பூஜாவை கதையை சொல்லி கோழியை அமுக்குவது போல் அமுக்கியிருக்கிறார்கள். இன்னொரு ஹீரோயின் ரம்யா நம்பீஸன்.
முதன் முறையாக பூஜா தனது அழகிய மூக்கில் மூக்குத்தி அணிந்து நடிக்கிறாராம்.
படத்துக்கு அலெக்ஸ் பால் என்ற புதியவர் இசையமைக்கிறார்.