முக அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் நவ்யா நாயர் என இன்டஸ்ட்ரியில் பேச்சு. தமிழில் படம் நடிக்காததால் இந்த வதந்திக்கு விளக்கம் சொல்ல நவ்யா நாயரும் இங்கில்லை. கன்னடத்தில் பிஸியாக இருக்கும் அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு,
யாரோ தவறான செய்தியை பரப்பியிருக்கிறார்கள் என்றார். அவரே நடந்த சம்பவத்தையும் விளக்கினார்.
ஒரு படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளாகி நவ்யா நாயரின் கன்னத்தில் பலமான அடி பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு பலமான காயம். அந்த தழும்பை மறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.
இது நடந்தது மூன்று வருடங்களுக்கு முன். அதை இப்போது ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்றார் நவ்யா. இந்த விபத்துக்குப் பிறகு இரண்டு டஜன் படங்களில் நடித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
லேட்டான வதந்திக்கு லேட்டஸ்ட் விளக்கம்.