கஜினியில் அசினின் நடிப்பைப் பார்த்து, அதைவிட யாரும் நடித்துவிட முடியாது என்று உணர்ந்ததால், இந்தி கஜினியில் அசினையே நடிக்க வைத்தார் அமீர் கான்.
அசின் மும்பை சென்றபின் கஜினி குறித்து அமீர் கான் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் அசின் பற்றிய பிரமிப்பு பிசினாக ஒட்டிக் கொண்டிருக்கும்.
வேண்டுமானால் பாருங்கள்... ஒரு நாள் பாலிவுட்டின் முன்னணி நடிகையாவார் என்று கூறியுள்ளார் அமீர் கான். இப்படி ஆருடம் சொல்ல காரணமாக இருந்தது அசினின் இந்தி உச்சரிப்பு.
அசின் இவ்வளவு நன்றாக இந்தி பேசுவார் என்று நான் நிகைக்வில்லை. சரளமாக தென்னிந்திய சாயலின்றி அவர் இந்தி பேசுவது உண்மையிலேயே ஆச்சரியம்.
அவரது இந்தி உச்சரிப்பு சிறப்பாக உள்ளது. அவரை தென்னிந்தியாவிலிருந்து வந்தவர் என்று யாரும் நினைக்கமாட்டார்கள்... இப்படி போகிறது அமீர் கானின் பாராட்டு.
அமீர் கானையே அசத்திய அசின் இந்திக்காரர்களின் இதயம் நுழையாமல் இருப்பாரா என்ன!