லைட்மேன்கள் கூடுதல் சம்பளம் கேட்டு வேலை நிறுத்தம் செய்ததால் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.
லைட்மேன்களுக்கு சென்னையில் நடக்கும் படப்பிடிப்புக்கு தினம் 350 ரூபாயும், வெளியூர் படப்பிடிப்புக்கு தினம் 370 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனை 500, 550 என உயர்த்தி தரும்படி லைட்மேன்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது. பலகட்ட ஆலோசனை நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.
இதனால் நேற்று காலை திடீரென லைட்மேன்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. எஸ்.வி. சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடிக்கும் நினைவில் நின்றவள் படமும் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டது.
காலையில் திடீரென்று வேலை நிறுத்தம் என்றால்கள், சரி, படப்பிடிப்பு முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்றதற்றும் ஒப்புக்கொள்ளவில்லை. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுவது போல் மிரட்டுகிறார்கள் என்றார் எஸ்.வி. சேகர்.
சம்பள உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் என்பதில் லைட்மேன்கள் சங்கம் உறுதியாக இருப்பதால், பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.