வில்லுக்குப் பிறகு விஜய் படத்தை இயக்குவது யார்? நாளுக்கு நாள் பலரின் பிபியை எகிற வைக்கிறது இந்தக் கேள்வி.
வில்லு முடிந்ததும் பாலசுப்ரமணியனின் ஏவி.எம்.க்காக படம் நடித்துக் கொடுக்கிறார் விஜய். இதற்கான அட்வான்சும் கைமாறியிருக்கிறது. ஆனால், இயக்குனர்?
அங்குதான் சிக்கல். பேரரசு, ஹரி என சில கமர்ஷியல் இயக்குனர்களுக்குப் பிறகு கடைசியாக அடிபடுவது அறிமுக இயக்குனர் ஒருவரின் பெயர். குருவியில் தரணியின் அரசிஸ்டெண்டாக பணிபுரிந்த பாபுசிவன் என்பவர் கூறிய கதை தயாரிப்பாளர்கள் தரப்புக்கும், விஜய்க்கும் பிடித்துப் போனதாக கூறுகிறார்கள்.
அப்படியா என்று விஜயிடம் கேட்கலாம் என்றால் அவர் இருபூபதோ சுவிட்சர்லாந்தில். வில்லுக்காக நயன்தாராவுடன் டூயட் பாட சென்றிருக்கிறாராம்.
அவர் வந்ததும் தெரியும். அவரை இயக்கப் போகும் அதிர்ஷ்டசாரி யார் என்பது!