Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவுக்கு வயது 92

Advertiesment
தமிழ் சினிமாவுக்கு வயது 92
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (20:25 IST)
தமிழ் சினிமா தோன்றி 75 வருடங்கள் ஆனதையொட்டி திரைத் துறையினரும், திரைத்துறையைச் சேர்ந்த சங்கங்களும் தங்கள் வசதி மற்றும் ரசனைக்கேற்ப கொண்டாடி வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பில் வெளிநாட்டில் நட்சத்திரஇரவு கூட நடத்தப்பட்டது.

இப்படியொரு சூழலில் தமிழ் சினிமா தோன்றி 75 வருடங்களல்ல, 92 வருடங்கள் ஆகிறது என்று சொன்னால் எப்படி இருக்கும்? சொன்னவர் திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியோடர் பாஸ்கரன்.

விஸ்டம் ட்ரீ பதிப்பகம் இந்திய சினிமாவில் ஆறு ஜாம்பவான்களின் - சிவாஜி கணேசன், ஷம்மி கபூர், பி.சி. பரூடா, குருதத், மெஹபூப் கான், சோஹரப் மோடி - வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டது. ஏவி.எம். சரவணன் புத்தகங்களை வெளியிட சிவாஜியின் மகன் ராம்குமார், பாலுமகேந்திரா, பாக்யராஜ், அருணாதேவி, தியோடர் பாஸ்கரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சிவாஜி குறித்த புத்தகத்தை எழுதியவர் தியோடர் பாஸ்கரன். அவர் தனது உரையில், தமிழ் சினிமா வரலாறு என்பது 75 ஆண்டுகள் அல்ல, 92 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1916-ல் முதல் தமிழ்ப் படம் வெளிவந்தது. நடராஜ முதலியார் இந்தப் படத்தை தயாரித்தார் என்று குறிப்பிட்டார்.

1931-ல் வெளியான பேசும் படமான காளிதாஸை வைத்தே தமிழ் சினிமாவின் வயதை கணக்கிடுகின்றனர். அதற்கு முன்பே அதாவது 1916-ல் மெளனப் படமான கீசகவதத்தை நடராஜ முதலியார் தயாரித்தார். கீழ்ப்பாக்கத்தில் ஸ்டுடியோ அமைத்து அவர் இப்படத்தை தயாரித்தார். சீசகவத கணக்குப்படி இன்னும் எட்டு ஆண்டுகளில் (2016) தமிழ் சினிமாவுக்கு வயது 100.

75 ஆண்டுகள் என்ற பிழையை இனிமேலாவது திருத்திக் கொள்வோம்!

Share this Story:

Follow Webdunia tamil