என்கவுண்ட்டர் போலீஸாக மும்தாஜ்! கவர்ச்சியாக பார்த்தவரை கையில் 'கன்'னோடு பார்ப்பது த்ரில் அனுபவம். ரசிக ஜனமே அந்த அரிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.
ராஜாதி ராஜாவில் கண்ணில் போதையும் வாயில் புகையுமாக மும்தாஜ் கொடுத்திருக்கும் போஸ், அவரது கவர்ச்சி face-ஐ யே மாற்றியுள்ளது. ராஜாதிராஜா என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார்.
ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்ற கொள்கை அறிவிப்புக்குப் பிறகு இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார் மும்தாஜ். அதில் ஒன்றுதான் அரசி.
காக்கிக்குள் மும்தாஜின் கவர்ச்சி மறைந்துவிடுமே என ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். கவர்ச்சிக்குதான் இருக்கவே இருக்கிறதே கனவுப் பாடல். நாலே பாட்டில் பின்னி பெடலெடுத்துவிட மாட்டாரா மும்தாஜ்!