ஏதோ கெட்டவார்த்தை என்று நினைக்க வேண்டாம். இது ஒரு படத்தின் பெயர்.
செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ஆடவாரி மாட்லகு அர்த்லே வேறுலே (பார்த்து... பல் சுளுக்கிடப் போகுது) படம் அங்கு சூப்பர் ஹிட். அதே கதையை செல்வராகவனின் உதவியாளர் ஏ. ஜவஹர் தனுஷ்-நயன்தாரா நடிப்பில் இயக்கியது யாரடி நீ மோகினி. இதுவும் ஹிட்!
இதே கதை கன்னடத்திற்கும் போகிறது. அங்கு படத்தின் பெயர், அந்து இந்து ப்ரீத்தி பந்து. வீரஷங்கர் இயக்க, நயன்தாரா வேடத்தில் திவ்யா (பழைய குத்து ரம்யா) நடிக்கிறார்.
இந்தியிலும் இதே கதையை விரைவில் படமாக்க உள்ளனர்.