ஜீவா, பூனம் பஜ்வா நடித்திருக்கும் தெனாவட்டு இம்மாதம் 29 வெளியாகிறது.
கற்றது தமிழ், ராமேஸ்வரம் என இரு சோதனை முயற்சிகளுக்குப் பிறகு வெளிவரும் படம். கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் ஜீவா.
கமர்ஷியல் படங்களுக்குரிய அனைத்து மசாலாவுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வி.வி. கிரி. தெனாவட்டு இவருக்கும் முதல் படம் என்பதால் படத்தின் வெற்றி ஜீவாவை விட இவருக்கு முக்கியம்.
ELK புரொக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.