Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்யம் : த‌மிழ‌ல் U/A தெலு‌ங்‌கி‌ல் A

Advertiesment
சத்யம் : த‌மிழ‌ல் U/A தெலு‌ங்‌கி‌ல் A
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (20:16 IST)
ஆகஸ்ட் 14 சத்யம் ரிலீஸ். பாவப்பட்ட தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ். சத்யம் படத்தில் இடம்பெறும் விஷால்-நயன்தாரா நெருக்கமான பாடல் காட்சிக்காக படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார்.
webdunia photoWD

இதில் எந்த அதிர்ச்சியுமில்லை. இதே சத்யத்தின் தெலுங்கு பதிப்பான சல்யூட்டிற்கு அதே சென்சார் கொடுத்திருப்பது ஏ சான்றிதழ்! ஏன்... ஏன் இந்த பாரபட்சம்?

குறிப்பிட்ட பாடல் காட்சியில் சில ஆட்சேபகரமான காட்சிகளை சென்சார் சொன்னதற்காக சத்யம் படத்திலிருந்து நீக்கிவிட்டார்களாம். அதேநேரம், தெலுங்கு சல்யூட்டில் தமிழில் கத்தரிக்கப்பட்ட அனைத்தும் இடம்பெறுகிறதாம். அதனால்தான் இங்கு U/A அங்கு A என்கிறார்கள்.

காரணம் உண்மையாக இருந்தால், அது தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். மேலும் படத்தின் சில வசனங்களையும் மியூட் செய்திருக்கிறது சென்சார்.

நாளை மலேசியாவில் சத்யம் ப்ரீமியர் ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil