Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் ஜக்குபாய்!

இன்று முதல் ஜக்குபாய்!
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:52 IST)
சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டியது, இப்போது சூப்பர் ஹீரோ சரத்குமார் நடிக்கிறார். ஜக்குபாய் கதையில் திருப்தியில்லாமல்தான், அதனை மறுத்து சந்திரமுகியில் நடித்தார் ரஜினி. இந்த புறக்கணிப்பை கே.எஸ். ரவிக்குமாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. படையப்பா மாதிரி ஜக்குபாயும் எப்போது எடுத்தாலும் வெற்றி பெறும் என கூறிவந்தார். இன்று அந்த ஜக்குபாயின் படப்பிடிப்பு தொடங்கும் நாள்.

சரத்குமார் இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவரது மகளாக ஸ்ரேயா. வஸாபி (Wasabi) படத்தின் தழுவலே ஜக்குபாய் என்கிறது ஒரு தகவல். தொட்டால் தூக்கியெறியும் ஷார்ட் டெம்பர் போலீஸ் அதிகாரி ஷான் ரெனோ. இரண்டு மாத விடுப்பில் ஜப்பான் வருகிறார். பத்தொன்பது வருடங்களுக்கு முனூ ரேனோ ஜப்பானில் பணிபுரிந்திருக்கிறார். அப்போது, ரெனோ திருமணம் செய்த அவரது கேர்ள·ப்ரெண்ட் திருமணத்திற்குப் பிறகு காணாமல் போகிறார். அவளைப் பற்றி எந்தத் தகவலையும் ரெனோவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

19 வருடங்களுக்குப் பிறகு ஜப்பான் வரும் ரெனோ, தனது பழைய நண்பனுக்கு (மைக்கேல் முல்லர்) மகள் ஒருத்தி இருப்பதை பார்க்கிறார். அவள் உண்மையில் யார்? ரெனோ தனது கேர்ள் பிரெண்டை கண்டுபிடித்தாரா? அவள் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக படமாக்கியிருந்தார் இயக்குனர் Gerard Krawczyk.

ரெனோ நடித்த வேடத்தில் சரத்தும் அவரது நண்பரின் மகளாக Ryoko Hirosue நடித்த வேடத்தில் ஸ்ரேயாவும் நடிக்கின்றனர். ஜப்பானுக்கு பதில் இதில் பாங்காக். விரைவில் ஷூட்டிங்கிற்காக பாங்காக் செல்கிறது ஜக்குபாய் டீம்.

Share this Story:

Follow Webdunia tamil