Publish Date: Mon, 11 Aug 2008 (19:43 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)
வருடத்திற்கு நான்கு படம் என்ற கணக்கில் கே.எஸ். ரவிக்குமாரையும் மிஞ்சிவிடுவார் செல்வா. நான் அவன் இல்லை, குரு என் ஆளு அடுத்து நூற்றுக்கு நூறு அதற்கு அடுத்து விஜயகாந்த் படம் என செல்வா செல்வது ராக்கெட் வேகத்தில்.
குரு என் ஆளு போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நூற்றுக்கு நூறு படத்தின் ரீ-மேக் வேலைகளையும் தொடங்கிவிட்டார் செல்வா.
இன்னொருபுறம் செல்வா சொன்ன கதைக் கருவை டெவலப் செய்து வருகிறார்கள் அவரது அசிஸ்டெண்டுகள். இது நூற்றுக்கு நூறு ரீ-மேக்கிற்குப் பிறகு எடுக்கப் போகும் படத்துக்கு.
இந்தக் கதை விஜயகாந்துக்காக தயாராகி வருகிறதாம். விட்டால் அவரின் பேரனுக்கும் ஒரு கதை செய்து விடுவார். அதிக வேகம் ஆபத்து... செல்வாவுக்கு தெரியாதா இந்த பழமொழி?