Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்குறிச்சியில் காதல் ஓசை!

Advertiesment
கள்ளக்குறிச்சி காதல் ஓசை
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:36 IST)
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத விஷயம் காதல். காதலை கருப்பொருளாகக் கொண்டு தயாராகிவரும் மற்றுமொரு படம் காதல் ஓசை.

காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்புக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறது. பின்னாலேயே கொலை வெறியுடன் சொந்தங்களின் கூட்டம். உயிர் தப்பிக்க காதல் ஜோடி சென்று சேரும் இடம் ஒரு மருத்துவமனை. அங்கேயும் வருகிறது காதலர்களை பிரிக்கும் கும்பல்.

அவர்களிடமிருந்து காதல் ஜோடியை மறைத்து வைக்கும் டாக்டருக்கும், கொலை வெறி கும்பலுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. ரத்தத்தில் உள்ள ஏ, ஓ குரூப்கள் எப்படி ஒன்றுடன் இன்னொன்று சேராதோ அதேபோல், இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேரக்கூடாது என வாதிடுகிறது துரத்திவந்த கும்பல். மனசோடு மனசு கலந்தவர்களை பிரிக்கக் கூடாது என பதிலடி கொடுகிறார் டாக்டர்.

இந்த சுவாரஸ்யமான காட்சியை கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையொன்றில் படமாக்கினர். மருத்துவமனையின் ஒரிஜினல் டாக்டர் மகுடமுடி என்பவரே இந்தக் காட்சியில் டாக்டராக நடித்தார் என்பது சுவாரஸ்யமான விஷயம்.

காதல் ஜோடிகளாக மாணவன் நினைத்தால் ஹீரோ ரித்திக்கும் புதுமுகம் ராகியும் நடித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil