யுகா படத்தில் அறிமுகமானவர் பாரதி. ஆனால் பாரதிக்கு பப்ளிசிட்டி வெளிச்சம் கிடைத்தது அம்முவாகிய நான் படத்தில்.
அம்முவாகிய நான் படத்திற்குப் பிறகு சினிமா வாய்ப்புகளில் அக்கறை செலுத்தவில்லை பாரதி. நெஞ்சத்தை கிள்ளாதே, சற்றுமுன் கிடைத்த தகவல் என சொற்ப படங்களுக்கே கால்ஷீட் தந்தார்.
விரைவில் உறவுக்காரரை திருமணம் செய்யப் போகிறேன் என அவர் அறிவித்தது பலருக்கு அதிர்ச்சி. வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும்போது இப்படியொரு முடிவா?
இம்மாதம் பதினொன்றாம் தேதி தான் சொன்னபடி திருவேற்காடு மாரியம்மன் கோயிலில் உறவுக்காரர் முருகளை திருமணம் செய்து கொண்டாராம் பாரதி. இனி சினிமாவில் அவர் நடிக்கப் போவதில்லையாம்.
இந்த முருகன் பாரதியின் உறவுக்காரர் மட்டுமல்ல, மேனேஜரும் கூட!