தகப்பனின் பிறந்தநாளுக்கு பிள்ளைகள் பரிசளிப்பார்கள். கஸ்தூரிராஜா இதில் வித்தியாசம். தனது பிறந்தநாளுக்கு பிள்ளைகளுக்கு மெகா பரிசொன்றை அளித்துள்ளார்.
பில்லா மாதிரி ஸ்டைலிஷான படம் இயக்க வேண்டும் என்று செல்வராகவனுக்கு நீண்ட நாள்களாக ஆசை. கஸ்தூரி ராஜா தயவில் ஆசை நிறைவேறவுள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் முடிந்ததும் தனுஷை வைத்து புதிய படம் இயக்குகிறார் செல்வராகவன். அவர் ஆசைப்பட்ட அதே ஸ்டைலிஷான மேக்கிங். கதையின் பெரும்பகுதி நடப்பது ஹாங்காங்கில்.
காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தினாலே செல்வராகன் படத்தின் பட்ஜெட் இருமடங்கு எகிறி விடும். ஹாங்காங்கில் நடத்தினால் பணம் போட யார் முன்வருவார்கள்?
இதோ நான் இருக்கிறேன் என படம் தயாரிக்க முன் வந்துள்ளார் கஸ்தூரி ராஜா. தனுஷ்- செல்வராகவன் மீண்டும் இணையும் படத்தை இவரே தயாரிக்கிறார். பட்ஜெட் ஏறக்குறைய 35 கோடிகள்!
தயாரிப்பு அப்பா என்பதால் பட்ஜெட் எகிறினாலும் பிரச்சனை பஞ்சாயத்துக்கு வராது.
நேற்று கஸ்தூரி ராஜாவுக்கு பிறந்தநாள். புதிய படம் தயாரிப்பது பிள்ளைகளுக்கு அவர் அளிக்கும் பிறந்தநாள் பரிசுதானே!