சிறப்பாக வந்திருக்கிறதாம் தாம் தூம். படத்தின் டிரெயிரைப் பார்த்து படம் எப்போது வரும் என ஆவலோடு கேட்கிறார்கள் ரசிகர்கள். ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி திட்டமிட்டிருந்த தாம் தூம் ரிலீஸ் மாம இறுதிக்கு தள்ளிப் போகும் என்கிறார்கள்.
ஆகஸ்ட் பதினைந்து விஷாலின் சத்யம் வெளியாகிறது. விஷால் அசிஸ்டெண்ட் கமிஷனராக நடித்திருக்கும் படம். நயன்தாரா ஜோடி.
சத்யம் வெளியாகும் அதே நாள் தாம் தூம் வெளியாக வேண்டாம் என நினைக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். படம் நன்றாக வந்திருக்கிறது, சத்யமுடன் ரிலீஸ் செய்து படத்தின் முக்கியத்துவத்தை ஏன் குறைக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.
அதனால் ஆகஸ்ட் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம். இந்த தள்ளிப்போகும் முடிவு கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.